போதும்
நீ
தினம்
தினம்
அழுது
சுருங்கியது
உன்
சிந்தனை
என்னும்
சிறகு
எல்லையில்லாமல்
இன்றே
விரிந்து
பறக்கட்டும்
பிரபஞ்சம்
முழுக்க!
இவண் ரமேஷ்
எறும்புக்கு
கூட
தெரியும்
நாம்
அன்றாடம்
பயன்படுத்தும்
பண்டங்களில்
ஆயிரம்
ரசாயன
கலப்படம்
உள்ளது
என்று
அவைகளுக்கு
தெரிந்தது
ஏன்
ஆறு
அறிவு
படைத்த
நமக்கு
தெரிவதில்லை?
இவண் ரமேஷ்
அவளிடம்
இருந்து
கடன்
வாங்கிய
நறுமணத்திற்கு
ரோஜாக்கள்
வரிசையில்
நின்று
கப்பம்
கட்டின!
இவண் ரமேஷ்
நேரமாக
நேரமாக
என்னுள்ளே
கொஞ்சம்
கொஞ்சமாக
நுழைகின்றாயடி
ஹிட்லர்
படைபோல்
இதயத்தில்
இடைவிடாமல்
குண்டு
போடுகின்றாய்
இதமாகத்தான்
இருக்கிறதடி
இதுவும்
இவண் ரமேஷ்
அருள்
என்னும்
அருவியில்
மூழ்கிவிட்டான்.
தன் கைப்பட்ட
இடமெல்லாம்
அவனாகவே
அழகான
அவதாரமாக
அவதரித்தான்.
அவதரித்து
அனைத்தையும்
அளவில்லா
ஆழ்ந்த
அன்பால்
ஆயுள் உள்ளவரை
அன்னையாய்
ஆள்கின்றான்
அவனே
ஆதியும்
அந்தமுமான
ஆண்டவன்
இவண் ரமேஷ்
பிரபஞ்சத்தின்
பிரமாண்ட
படைப்பின்
பிரதிபலிப்பே
உன்
பின்னப்படாத
கூந்தலோ?
இவண் ரமேஷ்
என்
கண்கள் மட்டுமல்ல
என்
கவிதைகளும்
என்
கண்ணீரில் மூழ்கின
என்ன
காரணம்
என்றெண்ணினேன்
காரணத்தை
என்
கன்னத்தில் உரைந்த
என்
கண்ணீர் கலங்கிக்கொண்டே
என்னிடம்
காண்பித்தது
என்
கண்ணிலும்
எண்ணிலடங்கா
கலவரம் என்று
எப்படி என்றேன். கண்ணிலுள்ள
கருப்பருக்கும் வெள்ளையருக்கும்
எழுந்த
கலவரத்தால்
என்
கண்ணீரெல்லாம்
என்
கண்களைவிட்டு
என்
கன்னத்தில் குடிபுகுந்தன
என்றும்
கலங்குகின்ற அகதிகளாக!
இவண் ரமேஷ்
வெடிகுண்டின்
மேல்கூட
உனக்கு
நம்பிக்கை
இல்லையா?
இவண் ரமேஷ்
அழுகின்ற
தன்
குழந்தைக்கு
அவளால்
தரமுடிந்ததோ
அடி
மட்டும்தான்!
இவண் ரமேஷ்
நிலாவை
காட்டினாய்
ரசித்தேன்.
நிலாவை
காட்டும்
உன்
நீண்ட
விரலை!
இவண்
ரமேஷ்
பல
பிரமாண்ட
பிரபஞ்சத்திற்கு
பயணிக்க
வேண்டுமா?
நின்ற
இடத்திலிருந்து
சிந்தனைகளை
நிறுத்தி
நித்தம்
நிகழ்காலத்தில்
நிலைத்திடு
இணையவாசல் (portal)
இக்கணமே
திறந்திடும்
இமைபொழுதில்
பாய்ந்து
பல
பரிமாண (Multi Dimension)
படைப்புகளை
பார்த்து
பரவசம்கொள்!
இவண் ரமேஷ்
Copyright © 2024 Mushin.Design - All Rights Reserved.
Powered by Mushin State of Mind
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.